சிவமயம்

சுயம்பு லிங்கமாக எழுந்தருள்ளிள்ள இரட்டை லிங்கேஸ்வரர்

ஸ்ரீ உண்ணாமுலை அம்பிகா சமேத ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர்
ஸ்ரீ மீனாட்சி அம்பிகா சமேத ஸ்ரீ சொக்கநாதர் ஆலயம்

(குழந்தை பாக்கியம் பரிகார ஸ்தலம்)

சென்னியமங்கலம்,திப்பிராஜபுரம், கும்பகோணம் வட்டம் , தஞ்சாவூர் மாவட்டம்

SRI RETTAI LINGESHWARAR SRI RETTAI LINGESHWARAR
SRI RETTAI LINGESHWARAR SRI RETTAI LINGESHWARAR


இரட்டை லிங்கேஸ்வரர்
ஸ்ரீ உண்ணாமுலை அம்பிகா
ஸ்ரீ மீனாட்சி அம்பிகா சமேத ஸ்ரீ சொக்கநாதர்
ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர்
Image Slider

“சிவ சிவ என்சிலர் தீவினையாளர்
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
சிவ சிவ என்றிடத் தேவரு மாவர்
சிவ சிவ என்னச் சிவகதி தானே”


தல வரலாறு


பேரன்புடையீர் ! ஆன்மீக பெருந்தகையீர்! வணக்கம்.

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே திப்பிராஜபுரத்திற்கு தென்கிழக்கே ½ கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிற்றூர் சென்னியமங்கலமாகும். இது 3000 ஆண்டுகளுக்கு முன் வரலாற்று சிறப்புமிக்க பேரூராக இருந்தது என்று வரலாற்று ஆய்விலிருந்து தெரிய வருகிறது.


இவ்வூர் பல்லவர் காலம் தொட்டு பிற்கால சோழர் காலம் வரை சிறப்புற்று விளங்கியது. இது கி.பி 7 ஆம் நூற்றாண்டில் இரண்டாம் புலிகேசி மன்னன் படையெடுப்பின் போது இவ்வூரை அவனது படைகள் வென்றதாக தெரிகிறது. மகேந்திரவர்ம பல்லவன் இவனுடன் சமாதானம் செய்து கொண்ட பின் இவண் படையுடன் திரும்பி செல்லும் போது பொங்கும் சாரளநல்லூர்,சகடமங்கலம்,அடியமங்கலம்,சென்னியமங்கலம்,ஐடியமங்கலம்,சதுர்லேதிமங்கலம்,அம்மன்குடி,காஞ்சிபுரம் அருகேயுள்ள மணிமங்கலம் ஆகிய ஊர்களை சூறையாடி கோயில்களை சிதைத்து ஐம்பொன் சிலைகளையும், நகைகளையும் கைப்பற்றி சென்றதாக கூரம் செப்பேடுகள் கூறுகின்றன.


மீண்டும் இக்கோயில்களை புதுப்பிக்கப்பட்டன சோழர் காலத்தில் பல கொடைகளையும் பெற்று அவர்கள் பட்டப் பெயராலேயே சென்னியமங்கலம் என அழைக்கப்பட்டது. சென்னியமங்கலம் - சென்னிய+மங்கலம் சென்னி என்றால் சோழன் என்றும் மங்கலம் என்றால் வேதியர்களுக்கு தானமாக அளிக்கப்பட்ட ஊர் என்ற பொருள்.


பல்லவர் கால செப்பேடுகளில் ஓன்று திருவள்ளூவர் தாலூக்காவில் உள்ள சிவன் வாயில் கிராமத்தில் கிடைத்த சமஸ்கிருத கல்வெட்டில் பல்லவ மன்னான சிம்ம விஷ்ணு தசாச்சவமேதம் பகுசுவர்ணம் ஆகிய யாகங்களை கோலியக்குடி சென்னியமங்கலம் அம்மன்குடி ஆகிய ஊர்களில் செய்து பல்லவ சாம்ராஜ்யத்தை சோழநாட்டிலும் விரிவு படுத்தினான் என்று கூறுகிறது.


இவ்வாறாக பல்லவர்காலம் முதல் பிற்கால சோழர் காலம் வரை சிறப்புற்று விளங்கிய சென்னியமங்கலம் 13 ம் நூற்றாண்டில் மாலிக்கபூர் படையெடுப்பால் கொள்ளையடிக்கப்படும், அழிக்கபட்டும் சீர்குலைந்தது.


இவ்வூரை சுற்றிலும் உள்ள ஊர்களும் அக்காலத்தில் சிறப்புற்று விளங்கியதாக தெரிகிறது. சென்னியமங்கலம் செல்லும் வழியிலுள்ள திப்பிராஜபுரம் என்ற ஊர் கி.பி 15ம் நூற்றாண்டில் சோழமண்டல ஆட்சியாளராக இருந்த திப்பதேவமகாராஜர் பெயரைத்தாங்கி திப்பதேவமகாராஜபுரம் என அழைக்கப்பட்டது. தற்போது இவ்வூர் திப்பிராஜபுரம் என அழைக்கப்படுகிறது. விக்கிரசோழன் காலத்தில் இவ்வூர் சிறப்புற்று இருந்ததால் இங்குள்ள சிவன் கோயில் விக்கிரம சோமஸ்வரம் என அம்மன்னன் பெயராலேயே அழைக்கப்படுகிறது.

இத்தலத்தின் சிறப்புகள்

கும்பகோணம் - ஆலங்குடி குருஸ்தலம் சாலையில் கும்பகோணத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ள மிகச்சிறிய கிராமம் சென்னியமங்கலம் ஆகும். இங்குள்ள இரட்டை லிங்கேஸ்வரர்களை ஓரே நேரத்தில் வழிப்பட்டால் புத்திர தோக்ஷம்,மாங்கல்ய தோக்ஷம்,கடன் நிவர்த்தியாகும். இக் கோயில் தல விருச்சக மரம்,அரச மரமும்,வில்வ மரமும் இரண்டும் ஓன்றாக இருப்பதால் மிகச் சிறப்பு. குழந்தைகள் இல்லாத தம்பதிகள் இந்த விருச்சக மரத்தை சுற்றி வந்தால் குழந்தை பாக்கியம் அருள் கிட்டும். இந்த லிங்கத்தை பார்த்தால் மனித உருவம் போல் இரண்டு கண்கள் மிகச் சிறப்பாக காட்சியளிக்கும் அக்காட்சியை பார்த்தால் சகல பாக்கியமும் கிடைக்கும். கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று பெரியோர்கள் கூறியுள்ளனர். ஆனால் கோயில் இருந்த இடம் பாழ்பட்டு கிடந்தால் ஊரின் வளமை கெடும் என்று திருவாசகம் கூறுகிறது. உலகை இயக்கும் பிரபஞ்சத்தை இயக்கும் ஈசனுக்கு உறையிடத்தினை அமைத்து தருவது நம் எல்லோரது கடமையாகும். இத் தெய்வீக பணியில் ஈடுபட்டு இக்கோயிலை கட்ட தீர்மானித்து திருப்பணி பணிகள் நடைபெற்று வருவதால் பெருவுள்ளம் கொண்டோர், திருவுள்ளம் கொண்டு இச்சிவாலயத்தினை உறுவாக்கி தர வேண்டுகிறோம்.


இரட்ரை லிங்கேஸ்வரர் கோயிலின் மிக அருகிலேயே வடபுறம் திருமலைராஜன் ஆறும் தெற்கே முடிகொண்டான் ஆறும் செல்வது சிறப்பாகும்.


இக் கோவிலின் விஷேசங்கள் மற்றும் பூஜைகள்

அம்மாவாசை,பெளர்ணமி திங்கை கிழமைகளில் அபிஷேங்கள் நடைப் பெறும். ஐப்பசி அன்ன அபிஷேகம் கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை தீபம். கார்த்திகை மாதத்தின் கடைசி சோமவாரம். சித்திரை பெளர்ணமி சுமங்கலி பூஜை ஆகியவை மிகச் சிறப்பாக நடைப் பெறும். வெளியூர் பக்தர்கள் வர முடியாதவாதவர்கள் G.சங்கர் நிர்வாக அறங்காவலர் (9443086587) அவர்களை தொடர் கொண்டால் அவர்களுக்கு பூஜை செய்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

நன்கொடைகள் அனுப்ப:

SRI UNNAMALAI SAMETHA SRI ARUNACHALESWARA ALAYA ARAKATTALAI
A/c: No:500101010801777
IFSC Code :CIUB0000022
CITY UNION BANK, VALANGAIMAN BRANCH


ஸ்ரீ உண்ணமலை அம்பிகா சமேத ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் அறக்கட்டளையின் நிர்வாகிகள்
C.குமார்G.சங்கர்G.பழனி
தலைவர்செயலாளர் பொருளாளர்
செல்:9442929740செல்:9443086587செல்:9791867757

மற்றும் சென்னியமங்கலம் கிராமவாசிகள்.FACEBOOK

www.000webhost.com